ADDED : டிச 05, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் சார் -- பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் பத்திரங்களை, திரும்ப அளிப்பதில் தாமதம் செய்வது உள்ளிட்ட புகார்கள் வந்தன. இதை ஆய்வுசெய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவிட்டது. இதில், சில மாவட்ட பதிவாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த பின்னணியில், மத்திய சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி, மதுரை தெற்கு, திருப்பூர், உதகமண்டலம், விருதுநகர், பெரியகுளம் ஆகிய பகுதிகளின் மாவட்டப் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத் பிறப்பித்துள்ளார்.