உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 25, 2026 12:00 AM
ADDED : நவ 24, 2026 11:30 PM

அ நிறம் | அளவு
உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே பாலத்தில் கார் மோதிய விபத்தில், தருண், 21, உட்பட, ஒன்பது மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை சேர்ந்தவர் தருண். இவர், பெரம்பலுாரில் தனியார் கல்லுாரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம், நண்பர்கள், 8 பேருடன் காரில் புதுச்சேரிக்கு சென்று கொண்டாடினார்.
அதன்பின், பெரம்பலுார் நோக்கி திரும்பி கொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை, 2:40 மணியளவில் உளுந்துார்பேட்டை, ஆசனுாரில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவற்றில் கார் மோதி கவிழ்ந்தது. இதில், தருண் உட்பட, ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
