தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருநீறு பூசி வந்த மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது புகார்

திருநீறு பூசி வந்த மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது புகார்

திருநீறு பூசி வந்த மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது புகார்


UPDATED : நவ 25, 2026 12:00 AM

ADDED : நவ 24, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 12:00 AM ADDED : நவ 24, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாலைக்கிராமம்: சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே பள்ளிக்கு, திருநீறு பூசி வந்த மாணவரை தாக்கியதாக, ஆசிரியர் ஜான் கென்னடி, 45, மீது, புகார் எழுந்துள்ளது.

சூராணம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு மாணவர் ஒருவர், அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, நெற்றியில் திருநீறு பூசி, பள்ளிக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் ஜான் கென்னடி, ‘ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்யாமல், பட்டையை மட்டும் அடித்து, பள்ளிக்கு வருகிறாயா’ எனக்கூறி முதுகில் கம்பால் தாக்கியுள்ளார்.

இதில், மாணவர் காயமடைந்ததால், அவரது பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். பள்ளி தாளாளர் சுரேஷ், ‘எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என கூறப்படுகிறது.

மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து கூறுகையில், ‘‘இந்த சம்பவம் குறித்து, எங்களுக்கு எவ்வித புகாரும் வரவில்லை; பள்ளியில், விசாரணை நடத்தப்படும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us