ADDED : நவ 01, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: சென்னையில் பணிபுரியும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, அக். 29ம் தேதி அன்று 41,000 வாகனங்களிலும், அக். 30ம் தேதி 51,000 வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.
விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூடுதலாக மூன்று லேன்களை திறந்து, 9 லேன்கள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் வாகனங்கள் காத்திருக்காமல் எளிதில் கடந்தன.
2010ம் ஆண்டு முதல், டோல்கேட்டை இந்த தீபாவளி பண்டிகைக்கு தான் கூடுதலாக வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.