பிளஸ் 1 தேர்வில் 92.44 சதவீதம் தேர்ச்சி மாநில பட்டியலில் 20ம் இடத்திற்கு முன்னேற்றம்
பிளஸ் 1 தேர்வில் 92.44 சதவீதம் தேர்ச்சி மாநில பட்டியலில் 20ம் இடத்திற்கு முன்னேற்றம்
ADDED : மே 16, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டம், பிளஸ் 1 தேர்வில் 92.44 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 20வது இடம் பெற்றது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வில், கடலுார் மாவட்டத்தில் உள்ள 248 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 96 மாணவர்கள், 15 ஆயிரத்து 79 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 175 பேர் தேர்வு எழுதினர்.
அதில், 13 ஆயிரத்து 536 மாணவர்கள், 14 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 893 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 89.67, மாணவிகள் 95.21. மாவட்ட தேர்ச்சி சதவீதம் 92.44 ஆகும்.
மாவட்டம் கடந்தாண்டு 91.01 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 21ம் இடத்தை பிடித்த நிலையில், இந்தாண்டு 1.43 சதவீதம் கூடுதலாக பெற்று மாநில பட்டியலில் 20ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.