ADDED : பிப் 23, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி சாமிநாதன், 55; மனைவி மகாலட்சுமி, 45. இருவரும், நேற்று முன்தினம் வேலுார் ஒடுகத்துாருக்கு, 'ஹோண்டா' பைக்கில் சென்றனர்.
அப்போது, ஒடுகத்துார் சவுந்தர், 30, நண்பர் பிரித்திவிராஜ், 15, ஆகியோர், 'பஜாஜ்' பைக்கில், ஒடுகத்துாரிலிருந்து ஏரியூருக்கு சென்றனர். அரிமலை கூட்ரோடு அருகே, இரு பைக்குகளும் நேருக்கு நேராக மோதின. இதில் ஹெல்மெட் அணியமால் வந்த நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்தில், சாமிநாதன், மகாலட்சுமி மற்றும் சவுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பிரித்திவிராஜ் படுகாயமடைந்தார். ஒடுகத்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.