ADDED : ஜன 22, 2025 06:36 PM
வடலுார் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில், சர்வதேச ஆய்வு மைய கட்டடங்கள் கட்ட தடை விதித்து, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதை, தமிழக பா.ஜ., வரவேற்கிறது. கடந்த ஆண்டு, சர்வதேச மையம் கட்ட, தி.மு.க., அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வள்ளலார் பக்தர்கள், பா.ஜ., உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. சென்னை உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் தொடர்ந்த வழக்கில், சர்வதேச மைய கட்டடங்கள் கட்ட, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
தடை இருக்கும் போதே, சத்திய ஞானசபைக்கு சற்று தள்ளி உள்ள பகுதியில், அரசு கட்டடங்கள் கட்ட துவங்கியது. இந்த அத்துமீறலை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆய்வு மைய கட்டடங்கள் கட்டவும், புதிய கட்டுமானங்கள் எழுப்பவும், உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை தொடரும் என, உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு, மக்கள் வழிபாட்டு முறையை சிதைக்க முயன்ற, தி.மு.க., அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.
-அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,

