ADDED : மார் 12, 2024 06:42 AM
மதுரை : ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் தலைவர் மணிகண்ட பிரபு.
இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் கலைஞர் நுாற்றாண்டு எறு தழுவுதல் அரங்கு உள்ளது.
இங்கு ஜன.,24 ல் ஜல்லிக்கட்டு நடந்தது. எனது நண்பர் வினோத் பெயரில் பதிவு செய்யப்பட்ட 'ஜெட்லி' என்ற காளை பங்கேற்றது.
அது சிறப்பாக விளையாடி மக்களின் பாராட்டை பெற்றது. ஜெட்லிக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது.
முதல் மற்றும் இரண்டாவது பரிசு பெற்ற காளைகள் ஒப்பீட்டளவில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முறைகேடு நடந்துள்ளது.
வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து முறையாக பரிசு அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு கலெக்டர், எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

