ADDED : பிப் 18, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார் : அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பிலிச்சிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு, 42. இவரது மனைவி ஜெயலட்சுமி, 38. கடந்த 2004ம் ஆண்டு திருமணமான இத்தம்பதிக்கு, ஒரு பெண், மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அய்யாவு, சென்னை கோயம்பேடில் கூலி வேலை செய்து வருகிறார். ஜெயலட்சுமி, பிலிச்சிக்குழி கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், வீட்டருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்த இவர்களது இரண்டரை வயது மகன் சர்வேஸ்வரன், இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தால் கழிவுநீர் வடிகாலுக்காக வெட்டப்பட்ட, 8 அடி ஆழ குழியில் தவறி விழுந்து இறந்தார். உடையார்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

