ADDED : அக் 12, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருக்கள், ஊர்களில் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. அதேநேரம், குறிப்பிட்ட பெயர்களை மட்டும் வைக்காமல், அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, மறைந்த தலைவர்களின் பெயர்களை வைக்க வேண்டும்.
கரூரில் நடந்த துயர சம்பவத்திற்கு, விஜயுடன் மனிதநேய அடிப்படையில் மட்டுமே ராகுல் பேசினார். இதில் அரசியல் இல்லை. தமிழக போலீசாரின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. 17 வயது சிறுமி கொலை வழக்கில் கைதானவருக்கு விடுதலை கிடைத்துள்ளது. இதனால் போலீசார் மீது பல கேள்விகள் எழுகின்றன. என்கவுன்டர், போலீஸ் காவலில் மரணம் போன்றவற்றை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும். எம்.பி.,க்கள் கூறும் குறைகள், வேண்டுகோள்களை ரயில்வே நிர்வாகம் கேட்பது கிடையாது. ரயில்வே பொது மேலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பெரிய நகரங்களுக்கு இடையே மட்டும் ரயில்களை இயக்குவதில் குறியாக உள்ளனர். சிறிய ஊர்கள், நகரங்களை ரயில்வே வாரியம் தவிர்க்கிறது. - கார்த்தி, காங்., - எம்.பி.,