ADDED : பிப் 18, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் போலீசார் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசு மற்றும் போலீசார் மீது, சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை.
சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய போலீசாரின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. வெற்று விளம்பரங்களில், முதல்வர் மூழ்கிக் கிடக்கிறார். தமிழகத்தில் தினமும் ஒரு பாலியல் குற்றச்செய்தி வெளிவருகிறது. அரசு, போலீஸ் தரப்பில் இருந்தும், எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்த பகுதியிலுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்.

