sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினம் ஒரு சாஸ்தா :தமிழக ஐயப்பன் கோயில்கள்-07

/

தினம் ஒரு சாஸ்தா :தமிழக ஐயப்பன் கோயில்கள்-07

தினம் ஒரு சாஸ்தா :தமிழக ஐயப்பன் கோயில்கள்-07

தினம் ஒரு சாஸ்தா :தமிழக ஐயப்பன் கோயில்கள்-07


ADDED : நவ 21, 2024 06:48 PM

Google News

ADDED : நவ 21, 2024 06:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

பிரச்னை தீர...


திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையத்தில் அய்யனார் பெரியசுவாமி கோயில் உள்ளது. உத்திர நட்சத்திர நாளில் இவரை தரிசித்தால் பிரச்னை தீரும். 300 குடும்பத்தினர்கள் ஆறு தலைமுறையாக குலதெய்வமாக இங்கு வழிபடுகின்றனர்.

ஆரம்ப காலத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் மண்மேடை மீது களிமண் அய்யனார் சிலை இருந்தது. சில ஆண்டுக்கு முன்பு கருங்கல்லால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் கிழக்கு நோக்கிபடி அய்யனார் பெரியசுவாமி மனைவியரான பூர்ணா புஷ்கலா தேவியுடன் இருக்கிறார். வாகனமாக யானை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கன்னி மூலை விநாயகர், கன்னிமார், பேச்சியம்மன், கருப்பராய சுவாமிக்கு சன்னதிகள் உள்ளன.

அமாவாசையன்று அபிேஷகம், அலங்காரம் நடக்கும். பங்குனி உத்திரத்தன்று நொய்யல் ஆற்று நீரில் அபிேஷகம் செய்து பொங்கல் இடுவர். இதையடுத்து வரும் ஞாயிறன்று கருப்பராய சுவாமி படையல் பூஜையுடன் விழா முடிவு பெறும்.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் 8 கி.மீ.,

நேரம்: காலை: 9:00 - 11:00 மணி

தொடர்புக்கு: 91711 21515, 99949 20332

அருகிலுள்ள தலம்: எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில்

நேரம்: காலை 7:00 - 1:00 மணி

மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94423 73455






      Dinamalar
      Follow us