திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பிரபல ரவுடி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை
ADDED : ஜன 28, 2025 11:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் ரவுடி அன்பு என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர்.
திருச்சியில் பிரபல ரவுடி திலீப் என்பவரின் கூட்டாளி அன்பு. இவருக்கு வயது 29. இவர் இன்று காலை ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கோவில் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

