நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ், இ.எஸ்.ஐ., பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் கூடுதல் இயக்குனராக டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி செயல்பட்டு வந்தார். தற்போது அவரை, அப்பிரிவின் இயக்குனராக நியமித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெங்கு, சிக்குன் குனியா உட்பட கொசுக்களால் ஏற்படும் நோய்களை தடுக்க, 27,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள், வீடு, வீடாக சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகள், பரிசோதனை கருவிகள் இருப்பில் வைக்கவும், சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.