நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவிலில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாம் செல்லும் விரைவு ரயிலில், வரும் 26ம் தேதி முதல், எல்.எச்.பி., என்ற நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது; அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
சொகுசு இருக்கைகளுடன், மொபைல் போன், 'சார்ஜிங்' வசதியும் இருக்கும்.

