* அரசு பள்ளி மாணவர்களிடம், உயர்கல்வி குறித்த ஆர்வத்தை வளர்க்க, 10ம் வகுப்பு படிக்கும், 500 மாணவர்கள் மற்றும், 500 மாணவியருக்கு, மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம், கல்வியாண்டிற்கு 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியானவர்களை தேர்வு செய்ய, மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, முதல்வர் திறனறி தேர்வு, அடுத்த ஆண்டு ஜனவரி, 25ல் நடைபெற உள்ளது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், இன்று முதல் டிச., 9ம் தேதி வரை, 'www.dge.tn.gov.in' என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும்.
* தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில், தட்டச்சு, சுருக்கெழுத்து, அக்கவுன்டன்சி தொழில்நுட்ப தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில், 2025 பிப்., 15ல், சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு நடைபெற உள்ளது. இளநிலை, முதுநிலை தேர்வுகள், பிப்., 22, 23ம் தேதிகளில் நடக்க உள்ளன. வணிகவியல் இளநிலை முதுநிலை தேர்வுகள், 24ம் தேதி நடக்க உள்ளன. 'டைப் ரைட்டிங்' என்ற தட்டச்சு இளநிலை, முதுநிலை, உயர்வேக தேர்வுகள் மார்ச் 1, 2ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான முடிவுகள், மே 6 வெளியிடப்படும். இத்தேர்வுகள் குறித்த மேலும் விபரங்கள், https://dte.tn.gov.in/ இணையதளத்தில் உள்ளன்
* அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,553 இடங்களுக்கு, 23,917 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு, ஜன., 27ம் தேதி, 'ஆன்லைன்' முறையில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. முதல்வர் அறிவுறுத்தலின்படி, தற்போது முன்கூட்டியே ஜன., 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டு, விரைவில் பணி நியமனம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.