தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரிகள்: நவ. 4

சில வரிகள்: நவ. 4

சில வரிகள்: நவ. 4


UPDATED : நவ 04, 2026 12:00 AM

ADDED : நவ 03, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:00 AM ADDED : நவ 03, 2026 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை: வந்தவாசியில் ஆயில் கசிவு பழுதால், டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அந்த சத்தம் கேட்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். அங்கிருந்த, மூன்று பைக்குகள் தீயில் கருகி எரிந்தன. மேலும், அப்பகுதி முழுதும் மின் தடை ஏற்பட்டது.

திருப்பத்துார்: ஜோலார் பேட்டை அருகே சமூக வலைதளமான ‘இன்ஸ்டாகிராமில், 16 வயது இளம்பெண்ணை காதலித்து, திருமணம் செய்ய முயன்ற ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன், 30, என்பவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

துாத்துக்குடி: திரு.வி.க., நகர் பகுதியில் ஜெயராஜ் என்பவரது இடத்தில் சேமித்து வைத்துள்ள தாமிர கழிவுகளை விலைக்கு வாங்குவதில், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில், லாரி உரிமையாளர் சிவா, 36, என்பவரின் வீடு சூறையாடப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி: வசவப்பபுரத்தைச் சேர்ந்த கோபிகிருஷ்ணா, 21, விஷால், 19. இவர்கள், திருநெல்வேலியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தனர். போலீசார், இருவரையும், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கில், திருநெல் வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம், இருவருக்கும், தலா, ஐந்து ஆண்டுகள் தண்டனை விதித்தது.

கள்ளக்குறிச்சி: உளுந்துார் பேட்டையில், தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், லாரி, ஆம்னி பஸ் என அடுத்தடுத்து, நான்கு வாகனங்கள் மோதியதில், சென்னை, தாம்பரத்தை சேர்ந்த திவ்யா, 27, மதுரையைச் சேர்ந்த கார்த்திகேயன், 32, படுகாயமடைந்தனர். ____________________ சிவகங்கை: அழகப்பபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ், 40, சக்கதந்தியை சேர்ந்த காசி விஸ்வநாதன், 73, ஆகியோரிடம், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறிய மர்ம நபர்கள், மொத்தம், 65 லட்சம் ரூபாயை மோசடி செய்தனர். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us