நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கேரள மாநிலம் வைக்கத்தில், ஈ.வெ.ரா., நினைவிடம் புனரமைப்பு மற்றும் நுாலகம் கட்டும் பணிகள், 8.14 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், டிச., 12ம் தேதி அங்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயனும் பங்கேற்க உள்ளார்.
* கடந்த 2016 - 2021 அ.தி.மு.க., ஆட்சியில், 1 லட்சத்து 38,592 வேளாண் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால், தி.மு.க., ஆட்சியில், மூன்றே ஆண்டுகளில், 1 லட்சத்து 69,564 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வரின் ஆலோசனைப்படி, வேளாண் மின் இணைப்புகளின் எண்ணிக்கை, இந்த அளவு உயர்ந்துள்ளது. இதனால், 3.38 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளதாக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

