நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில், 2,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர், குடும்ப சூழல் காரணமாக, தங்களது பணியிட மாற்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என, டி.ஜி.பி.,யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட சிலருக்கு, சிறிய தண்டனை வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதை பரிசீலித்து, 352 போலீசாருக்கு பணியிட மாற்றம் உத்தரவை ரத்து செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டு உள்ளார்.