நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 80 லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
மத்திய அரசு இத்திட்டத்திற்கு வழங்க வேண்டிய, 1,056 கோடி ரூபாயை நிலுவை வைத்துள்ளது. இந்த நிதியை விடுவிக்கும்படி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நிதியை பெறுவதற்கான நடவடிக்கையில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

