நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணா பல்கலையில், இந்த ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சுகாதார பயன்பாடுகள், ஒயர்லெஸ் தகவல் தொடர்பு, மின்சார வாகனங்களில் சோதனை ஆய்வு உள்ளிட்ட 11 பாடப்பிரிவுகளில், செயல்முறை பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், இரண்டு, மூன்றாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., மற்றும் அதற்கு சமமான படிப்பை தொடரும் மாணவர்கள் இதில் சேரலாம். முதலாம் ஆண்டு எம்.இ., - எம்.டெக்., மாணவர்களும் சேரலாம்.

