நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், பள்ளி குழந்தைகளுக்கு வாரந்தோறும் திங்கள் கிழமை வழங்கப்பட்டு வந்த அரிசி உப்புமா அல்லது ரவை உப்புமாவுக்கு மாற்றாக, பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்க, சமூக நலத்துறை ஆணையர் லில்லி உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.ஆர்.எம்., பல்கலையில் இயங்கும் தமிழ் பேராயம் அமைப்பின் சார்பில், தமிழில் சிறந்த நுால்களை எழுதுவோருக்கு, எட்டு வெவ்வேறு தலைப்புகளில் விருதும், தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. பதிப்பாளர்களுக்கு, 20,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. இதற்கு, 2022 முதல் 2024 வரை வெளியான நுால்களை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பலாம். விபரங்கள், https://www.srmist.edu.in/tamil-perayam/ என்ற இணையதளத்தில் உள்ளன.

