நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசின், 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், 23,600 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது, 2020ல் 58ல் இருந்து, 59 ஆகவும்; 2021ல், 59ல் இருந்து, 60 ஆகவும் உயர்த்தப்பட்டது
. இதேபோல, 'டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதையும், 58ல் இருந்து, 60 ஆக உயர்த்த வேண்டும்' என, அரசுக்கு தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

