நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு, 14,000 ரூபாய் மாத உதவித் தொகையுடன், தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக, குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில், ஏப்ரல் 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு, சிறப்பு முகாம் நடக்கிறது.
இதில், விருப்பம் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என, மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

