பட்டாசு ஆலை சுவர் இடிந்து வழிபாட்டிற்கு வந்தவர் பலி
பட்டாசு ஆலை சுவர் இடிந்து வழிபாட்டிற்கு வந்தவர் பலி
ADDED : ஜன 08, 2024 05:36 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை சுவர் இடிந்து விழுந்து குல தெய்வ வழிபாட்டிற்கு வந்த சாத்துார் படந்தாலை சேர்ந்த சுந்தர் மூர்த்தி 41, பலியானார்.
சாத்துார் அருகே படந்தாலை சேர்ந்த சுந்தர் மூர்த்தி. தனது குடும்பத்துடன் சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தில் உள்ள செந்தட்டி அய்யனார் கோயிலுக்கு சுவாமி கும்பிட வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததில் கோயிலுக்கு செல்லும் ரோடு முழுவதும் தண்ணீர் ஓடியது. அருகில் உள்ள பட்டாசு ஆலையின் சுற்றுச்சுவரை ஒட்டி, நடந்து செல்கையில் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சுந்தர மூர்த்தி உயிரிழந்தார்.
உடன் நடந்து சென்ற அவரது சகோதரர் மாரீஸ்வரன் 28, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு தண்ணீரில் விழுந்தார். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.