ADDED : மார் 06, 2024 12:45 AM
சென்னை:தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கான, 'ஹேக்கத்தான்' போட்டியை அறிவித்துள்ளது. பதிவு செய்ய, 20ம் தேதி கடைசி நாள்.
இது குறித்து, புத்தாக்க நிறுவன செயலர் உமாசங்கர் அறிவிப்பு:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், 2017 முதல் ஆண்டுதோறும் உயர் கல்வி மாணவர்களுக்காக, 'ஹேக்கத்தான்' போட்டியை நடத்தி வருகிறது. இதில் பங்கு பெறும் மாணவர்கள், புத்தாக்க முறையில் சந்தைப் படுத்தக்கூடிய, புதிய பொருட்களின் மாதிரியை உருவாக்க வேண்டும்.
சிறந்த மாதிரி பொருட்களுக்கு, முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசாக, 25,000 ரூபாய் வழங்கப்படும். பல்வேறு சான்றுகளும் வழங்கப்படும்.
இப்போட்டிக்கான மாணவர் கண்டுபிடிப்புகள், www.edii-innovation.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

