sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'காந்திக்காக கட்டப்பட்ட கோவிலில் பூஜை செய்யும் பட்டியலினத்தவர்'

/

'காந்திக்காக கட்டப்பட்ட கோவிலில் பூஜை செய்யும் பட்டியலினத்தவர்'

'காந்திக்காக கட்டப்பட்ட கோவிலில் பூஜை செய்யும் பட்டியலினத்தவர்'

'காந்திக்காக கட்டப்பட்ட கோவிலில் பூஜை செய்யும் பட்டியலினத்தவர்'


ADDED : ஏப் 20, 2025 01:51 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''ஒடிஷா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்ராவில், காந்திக்காக ஒரு கோவில் கட்டப்பட்டு உள்ளது. அந்த கோவிலில், இன்று வரை பட்டியல் இனத்தவர் தான் பூஜை செய்து வருகிறார்,'' என, 'கலைமகள்' மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் பேசினார்.

சென்னையில் உள்ள, 'தேஜஸ் பவுண்டேஷன்' சார்பில், 'பாரத தேசத்தின் புண்ணிய நதிகள் வரிசையில் - கலிங்கத்தில் ஓடும் நதிகள்' என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு, சென்னை மயிலாப்பூரில் உள்ள கோகுலே சாஸ்திரி ஹாலில் நேற்று நடந்தது. 'தேஜஸ் பவுண்டேஷன்' நிர்வாக அறங்காவலர் ரகுநாதன் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிச்சாண்டி பேசியதாவது:

தேஜஸ் பவுண்டேஷன் சார்பில், மாதம் இருமுறை, நாட்டில் உள்ள புண்ணிய நதிகள் குறித்து சொற்பொழிவு நடத்தப்படுகிறது. இதுவரை இவர்கள், 300 புத்தகங்களுக்கு மேல், 'டிஜிட்டல்' முறையில் புதுப்பித்துள்ளனர். தன்னலம் பாராமல், அவர்கள் செய்யும் பணிக்கு வாழ்த்துகள்.

வெளிநாட்டில் நதி என்பது வெறும் ஆறு தான். நம் நாட்டில், நதியை தெய்வமாக போற்றுகிறோம். நதிகள் நம் நாட்டின் கலாசாரமாக உள்ளன. அவற்றில், கங்கை, யமுனை போன்றவை ஜீவ நதிகளாக உள்ளன. ஹிந்து மதத்தில், ஐந்து பூதங்களில் ஒன்றான நீரோடு சேர்த்து, நிலம், காற்று, ஆகாயம், பூமி என, அனைத்தையும் கடவுளின் அம்சமாக பூஜித்து வருகிறோம்.

தற்போது, இருக்கும் நதிகள் கழிவுகளின் கூடாரமாக உள்ளன. அவற்றை சுத்தம் செய்ய, மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. கங்கை, யமுனை நதிகளை, பிரதமர் மோடி சுத்தம் செய்கிறார். கடவுளின் அம்சமாக இருக்கும் நதிகளை, நாம் போற்றி வணங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

'கலைமகள்' மாத இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், 'கலிங்கத்தில் ஓடும் நதிகள்' குறித்து பேசியதாவது:

இன்றைய ஒடிஷா, முற்காலத்தில் கலிங்க நாடு என்று அழைக்கப்பட்டது. அங்குதான், ரிஷ்யசிருங்க முனிவரால் பிறந்ததாகக் கூறப்படும் மகாநதி ஓடுகிறது. மகாநதி கரையில் பல சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன. மகாநதி நதியில், 1947ம் ஆண்டில் ஹிராகுட் அணை கட்டப்பட்டது. இது, 200 அடி உயரம், 10 கி.மீ., நீளம் உடையது. இன்றளவிலும், ஒடிஷா அரசு இந்த அணையை பாதுகாத்து வருகிறது.

கலிங்கத்தில் இருந்த கட்டாக் என்ற பகுதியில் தான், விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட, சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். அதன்பின், அவர் மேற்கு வங்கத்திற்கு சென்றார்.

ஒடிஷாவுக்கு, 1928 மற்றும் 1934 என, இரு முறை மஹாத்மா காந்தி பயணித்துள்ளார். சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள பத்ராவில், அவருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டு உள்ளது. அந்த கோவிலில், இன்று வரை பட்டியல் இனத்தவர் தான் பூஜை செய்து வருகிறார்.

மகாநதியின் கிளையாக அஜய் நதி உள்ளது. இந்த நதிக்கரையில் உள்ள கேந்துளி சாசன் பகுதியில், கி.பி., 1200ல் வாழ்ந்த ஜெயதேவரால், கீதகோவிந்தம் எழுதப்பட்டுள்ளது. இப்படி கலிங்க நாட்டுக்கு பல சிறப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us