வீராப்பு பட பாணியில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்ற லாரி டயர், டீசல் திருட்டுப் போன அவலம்
வீராப்பு பட பாணியில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்ற லாரி டயர், டீசல் திருட்டுப் போன அவலம்
ADDED : ஜன 08, 2024 10:18 PM

வாழப்பாடி:வீராப்பு பட பாணியில், காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்ற லாரி டயர்,டீசல் திருட்டுப் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக
அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்திய, நான்கு டிப்பர் லாரி மற்றும் ஹிட்டச் இயந்திரத்தை, கடந்த வருடம் மே, 4ல் வருவாய்த் துறையினர் புகாரின், காரிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து நான்கு டிப்பர் லாரி மற்றும் ஹிட்டச் இயந்திரம் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென இரு டிப்பர் லாரியில் இருந்த 5 டயர்கள், முழுவதுமாக திருடப்பட்டுள்ளதோடு, லாரியில் இருந்த டீசலும் திருடப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு டிப்பர் லாரியின் உரிமையாளரான பாலசுப்பிரமணி, அசோகன் உள்ளிட்ட இருவரும் லாரி டயர் இல்லாமல் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, காரிப்பட்டி போலீசாரிடம் இன்று கேட்டுள்ளனர். இதற்கு காரிபட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் அலட்சியமாக பதில் அளித்ததோடு, நீங்களே தான் திருடிச் சென்று உள்ளீர்கள் என வாக்குவாதம் செய்துள்ளனர். இதையடுத்து லாரியின் உரிமையாளர்கள், டிப்பர் லாரியில் இருந்த 5 டயர்களையும், கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வீராப்பு படத்தில், போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயர்கள், திருடுபட்ட காமெடி சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸிடம் கேட்டபோது:காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியின் 5 டயர்கள் மற்றும் டீசல் திருட்டுப் போனது தகவல் தெரியாது என தெரிவித்தார்.