உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு; நாளை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு; நாளை தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
ADDED : டிச 16, 2024 12:53 PM

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (டிச.,16) குறைந்த காற்றழுத்த தாழ்வாக உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் இன்று (டிச.,16) காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகும். அது, அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி நகரும். தமிழகத்தில் டிச., 17 மற்றும் 18 தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
12 முதல் 20 செ.மீ., வரை மழை பொழிய வாய்ப்பு உள்ளதால், 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் டிசம்பர் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.