போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை
போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்து கொத்தனார் தற்கொலை
ADDED : செப் 22, 2024 01:40 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே குடும்ப பிரச்னையில் தாயாரை தாக்கிய கொத்தனார் போலீஸ் விசாரணைக்கு பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் 35; கொத்தனார்.
இவர், கடந்த 19ம் தேதி இரவு குடும்ப பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது தாய் அம்சாவை தாக்கினார். படுகாயம் அடைந்த அம்சா அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின்பேரில், கண்டமங்கலம் போலீசார் விசாரணைக்காக கார்த்திக்கை காவல் நிலையம் வருமாறு கூறி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் 1:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விழுப்புரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். அதில் இறந்தது கார்த்திக் என்பது தெரியவந்தது.
விசாரணையில், போலீஸ் விசாரணைக்குப் பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
இறந்த கார்த்திக்கிற்கு நர்மதா, 27; என்ற மனைவியும் அக் ஷிதா என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர்.