ADDED : நவ 15, 2024 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வழங்கப்படும் உணவு வகைகளில் அவ்வபோது சிறு மாற்றங்கள் செய்யப்படுகிறது.
அவ்வகையில், உணவுப் பட்டியலில் சிறு மாற்றம் செய்து சமூக நலத்துறை உத்தரவிட்டு உள்ளது.
1, 3 வது வாரம் மற்றும் 2, 4வது வார செவ்வாய்கிழமைகளில் வழங்கப்படும் உணவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி முதல் மற்றும் 3வது வார செவ்வாய் கிழமைகளில் சாதம், கொண்டைக்கடலை குழம்பு கிரேவி - தக்காளி மசாலா முட்டை வழங்கப்படும்.
2 மற்றும் 4வது வார செவ்வாய் கிழமைகளில் சாதம், காய்கறி சாம்பார் - மிளகு முட்டை வழங்கப்படும்.