ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி
ஏ.டி.எம்.,மில் மின்சாரம் பாய்ந்து வடமாநில வாலிபர் பலி
ADDED : டிச 01, 2024 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் சந்தன், 20. இவர், சென்னை பிராட்வேயில் நண்பர்களுடன் தங்கி, லோடுமேனாக பணிபுரிந்தார்.
நேற்று,'பெஞ்சல்' புயலால் ஏற்பட்ட கனமழையால் பிராட்வே, பிரகாசம் சாலையில், 2 அடிக்கு மழைநீர் தேங்கியது.
அப்போது சந்தன், பிராட்வே, பிரகாசம் சாலையிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார்.
ஏ.டி.எம்., வாசலிலுள்ள இரும்பு கம்பியைப் பிடித்து ஏற முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து தண்ணீரில் மயங்கி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

