தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/காலி வீட்டுமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

காலி வீட்டுமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

காலி வீட்டுமனை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?


UPDATED : அக் 13, 2026 10:18 PM

ADDED : அக் 13, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 10:18 PM ADDED : அக் 13, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அருகே, காலி வீட்டுமனை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 62. விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த, 11ம் தேதி இரவு, 11:00 மணியளவில், மனைவி பொன்னம்மாவுடன் வீட்டின் முன்புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் சென்ற இரண்டு மர்ம நபர்கள், பீர் பாட்டிலை துாக்கி ராஜமாணிக்கத்துக்கு சொந்தமான காலி வீட்டுமனை மீது வீசி விட்டு தப்பினர். இதில், காலி மனையில் வைத்திருந்த தென்னங்கீற்று மட்டையில் பட்டு அவை தீப்பற்றி எரிந்தது. உடனே தம்பதியர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக, மறுநாள் ராஜமாணிக்கம், குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், பைக்கில் சென்ற இருவர், பீர் பாட்டிலை எங்கள் வீட்டு அருகே துாக்கி வீசியதில், தென்னங்கீற்றுகள் தீப்பற்றி எரிந்துள்ளது. அவர்கள் அந்த பாட்டிலில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் நிரப்பி வீசினரா என தெரியவில்லை என, தெரிவித்துள்ளார்.

முன் விரோதம் காரணமாக யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டனரா என, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us