ADDED : செப் 20, 2024 08:31 PM
சென்னை:அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆவாரா' என்ற கேள்வியால் டென்ஷன் ஆன நடிகர் ரஜினி, ''அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்,'' என்றார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடந்து வரும் 'கூலி' படப்பிடிப்பில் பங்கேற்ற பின், நடிகர் ரஜினி நேற்று காலை, சென்னை திரும்பினார். விமான நிலையத்தில், 'அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆவாரா' என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் டென்ஷன் ஆன ரஜினி, ''அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்,'' என, கடிந்து கொண்டார்.
பின், ''வேட்டையன்' திரைப்படம் நன்றாக வந்து உள்ளது. 'கூலி' படப்பிடிப்பு நன்றாக நடந்து வருகிறது. ஏ.ஐ., தொழில்நுட்பம் வாயிலாக, மலேஷியா வாசுதேவன் பாடியது போன்ற பாடலும் நன்றாக இருக்கிறது,'' என்ற, ரஜினி கூறினார்.
சமீபத்தில், தமிழக மூத்த அமைச்சர் துரைமுருகன் குறித்து ரஜினி பேசி, அது சர்ச்சையானது. அதையடுத்து, அரசியல் செய்திகளில் கவனமாக இருக்க முடிவெடுத்திருக்கும் ரஜினி, உதயநிதி பற்றி கேட்டதும் டென்ஷானார். மற்றபடி உதயநிதி மீது அவருக்கு எந்த கோபமும் கிடையாது என ரஜினி ஆதரவாளர்கள் கூறினர்.