sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு "சென்னை சாப்டர்' பிரார்த்தனை

/

மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு "சென்னை சாப்டர்' பிரார்த்தனை

மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு "சென்னை சாப்டர்' பிரார்த்தனை

மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு "சென்னை சாப்டர்' பிரார்த்தனை


ADDED : ஜூலை 24, 2011 11:50 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : உலக நன்மைக்காகவும், மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும், அகில இந்திய விஷ்ணு சகஸ்ரநாம கலாசார கூட்டமைப்பின் ஓர் அங்கமான, 'சென்னை சாப்டர்' சார்பில், லலிதா சகஸ்ரநாம பாராயணம் மற்றும் அர்ச்சனை, தி.நகரில் நடைபெற்றது.

சென்னையை சுற்றியுள்ள 60 மண்டலத்தை சேர்ந்தவர்கள், இந்நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணா சுவீட்ஸ் உரிமையாளர் முரளி, பிரியா கி÷ஷார் பங்கேற்றனர். இது குறித்து முரளி பேசும் போது, ''உலக நன்மைக்கும், அமைதிக்காகவும் இறைவனை வேண்டி இந்த பிரார்த்தனை நடக்கிறது. விஷ்ணு மண்டலத்தின் ஒரே குறிக்கோள், அனைவரும் நாராயணனிடம் சரணடைய வைப்பது. ஒவ்வொருவருக்கும் கிடைத்த வாழ்க்கை, கடவுள் கொடுத்த தானம். ஒவ்வொரு நேரத்தில் நமக்கு நடக்கிற அதிசயம் அவரால் தான் நிகழ்கிறது,'' என்றார். பிரியா கி÷ஷார் பேசும்போது, ''பொறுமை, நம்பிக்கை , பக்தி போன்ற நல்ல விஷயங்கள் யாரிடம் எல்லாம் இருக்கிறதோ அவர்களையே கடவுள் அடைவார். நவபக்திகள் என்பது ஒன்பது முறையான பக்தி வழிமுறைகள். இதை, பின்பற்றுவதன் மூலமும் கடவுளை அடையலாம். பதவி மோகம் ஒருவரிடம் அதிகமாக இருக்கக் கூடாது. ஆனால், உலகிலேயே சிறந்த பதவி என்றால் அது சச்சிதானந்தா பதவி தான். இதில் உள்ள பணியை முக்திக்கான பணி என்பர்,'' என்றார். நிகழ்ச்சியில், சந்தன ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அறங்காவலர் வெங்கடேஸ்வரன், மீனாட்சி சுந்தரம் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us