பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஆட்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : நவ 08, 2025 01:15 AM

உடுமலை: 'தி.மு.க., ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது,' என உடுமலையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு உதாரணமாக கோவையில் ஒரு பெண் கடத்தப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்ந்தும், ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக அரசு பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ேஷா நடத்த பல்வேறு கட் டுப்பாடுகளை விதித்துள்ளதற்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தி.மு.க., வினர்தான் தமிழகத்தில் ரோடு ேஷா நடத்தி வருகின்றனர். எனவே, தி.மு.க., வி.சி., கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என தெரியவில்லை. வரும் தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு, தெரிவித்தார்.
முன்னதாக காட்டாற்று வெள்ளத்தால், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட பாதிப்புகளை அவர் பார்வையிட்டார். பா.ஜ., அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

