தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஏப்ரலில் ஏழு நாட்கள் வெப்ப அலை வீசும்

 ஏப்ரலில் ஏழு நாட்கள் வெப்ப அலை வீசும்

 ஏப்ரலில் ஏழு நாட்கள் வெப்ப அலை வீசும்


ADDED : ஏப் 01, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:'தமிழகத்தில் ஏப்ரல் மாதம், ஏழு நாட்கள் வரை, வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலைத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய வானிலைத் துறை, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளில், அடுத்த மாதத்துக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிடும். அந்த வகையில், ஏப்., மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பு அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அதில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம், ஏப்ரல் மாதத்தில் படிப்படியாக அதிகரிக்கும். வடக்கு மற்றும் கடலோர மாவட்டம், உள் மாவட்டங்களில் சில இடங்களில், ஐந்து முதல் ஏழு நாட்கள், வெப்ப அலை நாட்களாக அமைய வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பகல் மற்றும் இரவு நேரம், அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது.

ஒரு சில நாட்கள், மழை பெய்ய வாய்ப்பு இருந்தாலும், வெப்பத்தின் தாக்கமே பிரதானமாக இருக்கும். இதனால், பொது மக்கள் அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்ப அலை காரணமாக, பல்வேறு அசவுகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை, பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை ஆகிய நகரங்களில், 101 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us