sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா : தமிழக ஐயப்பன் கோயில்கள்-23

/

தினமும் ஒரு சாஸ்தா : தமிழக ஐயப்பன் கோயில்கள்-23

தினமும் ஒரு சாஸ்தா : தமிழக ஐயப்பன் கோயில்கள்-23

தினமும் ஒரு சாஸ்தா : தமிழக ஐயப்பன் கோயில்கள்-23


ADDED : டிச 07, 2024 06:32 PM

Google News

ADDED : டிச 07, 2024 06:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா,புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

கூடலுார் சபரிமலை


நீலகிரி மாவட்டம் கூடலுாரில் உள்ளது சாஸ்தாகிரி ஐயப்பன் கோயில். இக்கோயில்

'சபரிமலை' என அழைக்கப்படுகிறது. இங்கு வந்தால் வியாபார வளர்ச்சி ஏற்படும். காடாக இருந்த இப்பகுதியில் பக்தர் ஒருவர் ஐயப்பன் சிலையை கண்டெடுத்தார். பின்

காணிப்பையூரைச் சேர்ந்த நம்பூதிரி ஒருவரின் ஆலோசனைப்படி கோயிலை அமைத்தார்.

ஐயப்பன், குருவாயூரப்பனுக்கு சன்னதி அமைத்து 'சாஸ்தாகிரி ஐயப்பன் கோயில்' என்ற

பெயரும் சூட்டப்பட்டது. பங்குனி உத்திரத்தன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பரிவார

தெய்வங்களாக விநாயகர், பகவதி அம்மன், முருகன், நாகராஜா உள்ளனர்.

ஞாயிறன்று ஐயப்பனை வழிபட்டால் வியாபாரம் சிறக்கும். குருவாயூரப்பனுக்கு

துளசிமாலை சாத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கூடலுாரில் இருந்து 5 கி.மீ., தொலைவில்கோழிப் பாலம் தனலட்சுமி எஸ்டேட்டில் கோயில் உள்ளது.

நேரம்: காலை 6:00 - 10:30 மணி மாலை 5:30 - 7:00 மணி

தொடர்புக்கு: 94873 65019, 96296 70216

அருகிலுள்ள தலம்: ஊட்டி காசி விஸ்வநாதர் 50 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 11:00 மணி மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0423 - 244 6717






      Dinamalar
      Follow us