ADDED : நவ 27, 2024 06:44 PM

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.
தம்பதி ஒற்றுமைக்கு...
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லுக்காரத் தெருவில் உள்ளது கச்சபேஸ்வரர் கோயில். இங்கு அருள்புரியும் தர்மசாஸ்தாவை வழிபட்டால் தம்பதி ஒற்றுமை உண்டாகும். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, மத்தாக பயன்பட்ட மந்திர மலை கடலில் அழுந்த துவங்கியது. இதனால் திருமால் கச்சப (ஆமை) வடிவமெடுத்து, இத்தல சிவபெருமானை வேண்டி மலையை தாங்கும் சக்தியை பெற்றார். இதனால் சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் என்ற பெயர் உண்டானது.
அப்போது சிவனருளைப் பெற விநாயகர், துர்கை, சூரியன், பைரவர், தர்மசாஸ்தா வழிபட்டு பலன் பெற்றனர். இங்கு பூர்ணா, புஷ்கலாவுடன் தர்ம சாஸ்தா சன்னதி உள்ளது. உத்திர நட்சத்திரத்தன்று இவருக்கு அர்ச்சனை செய்தால் விருப்பம் நிறைவேறும்.
காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 12:00 மணி மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 044 - 2733 3840
அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் சத்யநாதர் கோயில் 0.5 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - 1:00 மணி மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 044 - 2723 2327