ADDED : நவ 30, 2024 06:17 PM

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.
கடன் பிரச்னையா...
விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் பகுதியில் பூரணி பொற்கலையுடன் அருள்பாலிக்கும் ஹரிஹர புத்திர ஐயனாரப்பரை தரிசனம் செய்ய வாருங்கள். கடன் பிரச்னை தீரும்.காவல் தெய்வமான ஐயனார் கண்காணிப்பில் இந்த ஊர் உள்ளது. இங்கு தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலில் ஐயனாரப்பர் உற்ஸவர் சிலை உள்ளது. திருவிழாவின் போது ஐயனாரப்பர் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடக்கும். இங்கு ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் பொங்கல் வைப்பது, அன்னதானம் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.
இவரை வழிபட்டால் குழந்தை இல்லாதோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப கஷ்டம், கடன் பிரச்னை தீரும்.
கடலுாரில் இருந்து 43 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 8:00 மணி மாலை 5:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 96559 38476
அருகிலுள்ள தலம்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோயில் 18 கி.மீ.,
நேரம்: காலை 6:30 - 12:00 மணி மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94862 79990