sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-1

/

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-1

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-1

தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-1


ADDED : நவ 15, 2024 07:09 PM

Google News

ADDED : நவ 15, 2024 07:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.

சுசீந்திரம் பூசாஸ்தா

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே விஷ்ணுபுரத்தில் பூசாஸ்தா குடிகொண்டிருக்கிறார். இக்கோயில் வயல்கள் நடுவே ரம்மியமான சூழலில் உள்ளது. விவசாயி ஒருவர் உழும் போது சுயம்புவாக கிடைத்தவர் என்பதால் இவர் 'பூசாஸ்தா' என அழைக்கப்படுகிறார். 'பூ' என்பது பூமியைக் குறிக்கும். இவர் அசரீரியாக, 'எனக்கு கோபுரம் கட்ட வேண்டாம். ஓலைக்குடிசையில் குடியிருக்க விரும்புகிறேன்' என சொன்னதால் வெட்ட வெளியில் அருள்பாலிக்கிறார். செங்கோட்டையைச் சேர்ந்த பக்தர் ஒருவரிடம், 'உன் குடும்பத்தினரே எனக்கு பூஜை செய்ய வேண்டும்' என கனவில் கட்டளையிட்டார். அவரது 14வது தலைமுறையினரே தற்போது பூஜை செய்கின்றனர். வாசனை திரவியமான புனுகை இங்கு சாத்துகின்றனர்.

மண்டல பூஜை, மகர விளக்கு, பங்குனி உத்திர ஆராட்டு அன்று ருத்ர ஜபம், அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. நினைத்தது நடக்க இவரை தரிசியுங்கள்.

சுசீந்திரத்தில் இருந்து 5 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 8:00 மணி

மாலை 4:00 - 5:15 மணி

தொடர்புக்கு: 98411 09047

அருகிலுள்ள தலம்: சுசீந்திரம் தாணுமாலயசுவாமி

நேரம்: அதிகாலை 4:30 -- 12:00 மணி

மாலை 5:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 0465 - 224 1271






      Dinamalar
      Follow us