ADDED : நவ 13, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், தேவதானம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், திருடர்களை தடுத்த, இரு காவலாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கோவில்களுக்கே பாதுகாப்பு இல்லை; கொலை செய்யும் அளவு துணிச்சல் வருவதற்கு, காவல்துறையின் மெத்தனபோக்கே காரணம். திராவிட மாடல் ஆட்சியில், சுவாமிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கோவில் உண்டியல் உடைக்கப்பட்டதாக கூறும் நிலையில், நகைகள் திருடுபோனதா என தகவல் வெளிவரவில்லை.
கோவில்களில் பெயரளவில் காவலாளிகளை நியமிப்பதை விடுத்து, பிற அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் கொடுத்து, முன்னாள் ராணுவ வீரர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும். கோவிலை காக்கும் பணியில் உயிர் நீத்த, இருவர் குடும்பத்துக்கு உரிய நிவாரணமும் அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.
- காடேஸ்வரா சுப்ரமணியம் தலைவர், ஹிந்து முன்னணி

