உள்ளடக்கத்திற்கு செல்ல

அலைபேசிக்கு சார்ஜ் செய்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி
அலைபேசிக்கு சார்ஜ் செய்த மாணவர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : பிப் 26, 2024 11:46 PM

அ நிறம் | அளவு
திருவாடானை : திருவாடானை அருகே அலைபேசிக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி ஐ.டி.ஐ., மாணவர் பலியானார்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பண்ணவயல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராமன். இவரது மகன் அமுதகிருஷ்ணன் 17. ஆர்.எஸ்.மங்கலம் தனியார் ஐ.டி.ஐ.,யில் படித்தார். பண்ணவயலில் இவர்களின் புதிய வீடு கட்டும் பணி நடக்கிறது.நேற்றுகாலை 10:00 மணிக்கு அங்கு சென்ற அமுதகிருஷ்ணன் வீட்டில் சுவிட்ச் போர்டில் அலைபேசிக்கு சார்ஜ் ஏற்ற முயன்றார். சுவிட்ச் பாக்சில்பிளக்கை மாட்ட முயன்ற போது மின்சாரம் பாய்ந்தது. அதில் துாக்கி வீசப்பட்டதில் மயங்கினார். திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமுதகிருஷ்ணன் இறந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
