sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வாயில் விஷம் ஊற்றி இளம்பெண் கொலை; திருமணத்துக்கு மறுத்ததால் தாய்மாமன் வெறி

/

வாயில் விஷம் ஊற்றி இளம்பெண் கொலை; திருமணத்துக்கு மறுத்ததால் தாய்மாமன் வெறி

வாயில் விஷம் ஊற்றி இளம்பெண் கொலை; திருமணத்துக்கு மறுத்ததால் தாய்மாமன் வெறி

வாயில் விஷம் ஊற்றி இளம்பெண் கொலை; திருமணத்துக்கு மறுத்ததால் தாய்மாமன் வெறி

2


ADDED : மார் 20, 2024 07:14 AM

Google News

ADDED : மார் 20, 2024 07:14 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடக மாநிலம், ஹாவேரி ஹனகல் பைச்சவள்ளி கிராமத்தில் வசிப்பவர் மல்லப்பா. இவரது மகள் தீபா, 21. இவருக்கும், உறவு முறையில் தாய்மாமனான மால்தேஷ், 35, என்பவருக்கும், கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 22ம் தேதி, திருமணம் நடக்க இருந்தது.

ஆனால், மால்தேஷை திருமணம் செய்வதில், தீபாவுக்கு திடீரென விருப்பம் இல்லாமல் போனது. இது குறித்து மால்தேஷிடம், தீபா கூறி உள்ளார். ஆனால், தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று, மால்தேஷ் மிரட்டி உள்ளார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில், தீபா துாக்கில் சடலமாக தொங்கினார்.

தற்கொலை செய்ததாக, குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், தீபா விஷம் குடித்தது தெரிந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் மால்தேஷை பிடித்து, போலீசார் விசாரித்தனர். தீபா வாயில் விஷம் ஊற்றி கொன்று, உடலை துாக்கில் தொங்க விட்டதை ஒப்புக்கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.

'எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. பெற்றோர் கூறியதால் ஒப்புக்கொண்டேன். திருமணம் செய்தாலும், உன்னுடன் குடும்பம் நடத்த மாட்டேன்' என, மால்தேஷிடம் தீபா கூறி உள்ளார். இதனால் கோபத்தில் தீர்த்துக் கட்டியதாக மால்தேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அக்கா, தங்கை பலாத்காரம்; 5 பேர் கும்பலுக்கு வலை


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 27 வயது பெண், அவரது 25 வயது தங்கையும் அருகே உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்கின்றனர். அங்கு சம்பள பணத்தை வாங்க செல்வதற்காக, 27 வயது பெண், அருப்புக்கோட்டை அருகே மற்றொரு கிராமத்தில் வசிக்கும் தன் தங்கை வீட்டிற்கு வந்தார்.

அப்போது, அவர்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர், அந்த பெண்களின் நெருங்கிய உறவினருக்கு ஆபத்து எனக் கூறி, இருவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இருந்த நான்கு பேர், ராஜ்குமாரை அடிப்பது போல நடித்து விரட்டிவிட்டு, அக்கா, தங்கையை பலாத்காரம் செய்து தப்பினர். போலீசார் ராஜ்குமார் உட்பட, ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

துாத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 குழந்தைகள் மீட்பு: இருவர் கைது


துாத்துக்குடி தென்பாகம் அந்தோணியார் கோவில் அருகே 9ம் தேதி, வேலூரை சேர்ந்த ஒரு பெண் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். அவருடன் படுத்திருந்த அவரது நான்கு மாத பெண் குழந்தை கடத்தப்பட்டது. எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் முயற்சி நடந்தது. இதில் கோயில் பிரகாரத்தில் இருவர் வரும் வீடியோ, படம் சந்தேகத்தில் போலீசாரால் வெளியிடப்பட்டது.

அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அண்ணாநகரைச் சேர்ந்த கருப்பசாமி 47, கரும்பனூரை சேர்ந்த ராஜன் 53 என தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 2022 டிசம்பரில் திருச்செந்துாரில் கடத்திய இரண்டரை வயது குழந்தை, 2023 அக்டோபர் 21ல் குலசேகரப்பட்டணம் கோவிலில் கடத்திய 2 வயது குழந்தை மற்றும் துாத்துக்குடியில் அண்மையில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை மேலும் இன்னொரு குழந்தை ஆகிய 4 குழந்தைகளை மீட்டனர்.

கைதான இருவரும் கோயில்களில் பிச்சையெடுக்கும் பிச்சைகாரர்களின் குழந்தைகளை கடத்தி ஆலங்குளம் பகுதியில் குழந்தைகள் இல்லாத பெற்றோருக்கு விற்பனை செய்துள்ளனர்.

பெண் துாய்மை பணியாளர் வெட்டிக்கொலை: ஒருவர் கைது


துாத்துக்குடி மாவட்டம் மஞ்சள்நீர் காயலை சேர்ந்தவர் கனகா 45. இவரது கணவர் ஐகோர்ட் காலமாகிவிட்டார். கனகா துாத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். மூன்று குழந்தைகள் உள்ளனர். தினமும் பஸ்சில் பணிக்கு சென்று வந்தார். நேற்று காலை பணிக்கு பஸ்சில் வந்தார்.

துாத்துக்குடி சி.இ.ஜி காலனி பஸ் ஸ்டாப்பில் இறங்கியபோது ஒரு நபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். இதில் கனகா சம்பவ இடத்திலேயே இறந்தார். தென்பாகம் போலீசார் விசாரித்தனர். துாத்துக்குடி பசுவந்தனையைச் சேர்ந்த முனியசாமி 40, என்பவரை கைது செய்தனர்.

முனியசாமி பழையகாயலில் உள்ள மீன் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வந்தார். கனகாவுடன பழக்கம் இருந்தது. சமீப காலமாக கனகா, அவருடன் பேசுவதை தவிர்த்ததால் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய வாலிபர் கைது


நவ., 29ல் இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கத்தை பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த பாம்பனை சேர்ந்த பிரசாந்தை 27, தேடினர். நேற்று பாம்பனில் வைத்து பிரசாந்தை கைது செய்து, மதுரை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஏப்.,2 வரை மதுரை சிறையில் அடைத்தனர்.

தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்த கைதி


திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதான கூலித்தொழிலாளி ஷாஜகான் 37, தண்டனைக்கு பயந்து நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். கை, இடுப்பு முறிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் விஜய் கட்சி நிர்வாகிகள் மோதல்


ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மேல்வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் அஜீத், 20. இவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கட்சியில், கிளை பொறுப்பாளராக உள்ளார். அதேபோல, கொடைக்கல்லை சேர்ந்த ஏழுமலை, மாவட்ட பொறுப்பில் உள்ளார்.

கட்சியில் புதிய உறுப்பினர்களை அஜீத் சேர்த்து வந்தார். இதையறிந்த ஏழுமலை, புதிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளை தன் மூலமாக தான், அவர்களுக்கு வழங்க வேண்டுமென, அஜீத்திடம் கூறி வந்தார். இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் வாக்குவாதம்ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மற்றும் அவரது ஆதர வாளர்கள், நேற்று முன்தினம் இரவு, அஜீத்தின் வீட்டிற்கு சென்று, ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பைக்கை சேதப்படுத்தினர். அஜீத் புகார் படி, கொண்டபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆறு நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


தெலுங்கானா எல்லையையொட்டி அமைந்துள்ள மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில், பிரஹணஹிதா ஆற்றின் குறுக்கே நக்சல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி அப்பகுதியில் போலீசாருடன், மத்திய ரிசர்வ் போலீஸ் படை உட்பட பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோலமார்கா மலைப்பகுதி அருகே பதுங்கி இருந்த நக்சல் அமைப்பினர், திடீரென பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நக்சல் அமைப்பின் நான்கு பேர் பலியாகினர்.

இதேபோல், சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரு நக்சல்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர்.






      Dinamalar
      Follow us