ADDED : மார் 03, 2024 01:31 AM

சென்னை: பால், நெய்யை தொடர்ந்து, ஐஸ்கிரீம் வகைகளின் விலையையும், ஆவின் நிர்வாகம் திடீரென உயர்த்திஉள்ளது.
ஆவின் நிறுவனம், பாலை மட்டுமின்றி, நெய், தயிர், லஸ்ஸி, ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த நிறுவனம், பால் மற்றும் நெய் விலையை, மூன்று மாதங்களுக்கு முன் உயர்த்தியது. தற்போது, ஆவின் ஐஸ்கிரீம் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆவின் சாக்கோ பார் ஐஸ்கிரீம், 20 ரூபாயில் இருந்து, 25 ரூபாய்; வெண்ணிலா பந்து ஐஸ்கிரீம், 28 ரூபாயில் இருந்து, 30 ரூபாய்; வெண்ணிலா மற்றும் சாக்லேட் கோன் ஐஸ்கிரீம், 30 ரூபாயில் இருந்து, 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வரும் என, ஆவின் நிர்வாக இயக்கு னர் வினீத் அறிவித்துஉள்ளார்.
கோடையில் புதிய வகை ஐஸ்கிரீம்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், இந்த விலை உயர்வு நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

