ரூ.10க்கு 'பாதாம் மிக்ஸ்' செப்.,1 முதல் விற்கிறது ஆவின்
ரூ.10க்கு 'பாதாம் மிக்ஸ்' செப்.,1 முதல் விற்கிறது ஆவின்
ADDED : ஆக 27, 2025 10:49 PM
சென்னை:'தமிழகம் முழுதும், செப்டம்பர் 1 முதல், 14 கிராம் எடையுள்ள, ஆவின், 'பாதம் மிக்ஸ்' பவுடர் விற்பனைக்கு வர உள்ளது' என, ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஆவின் சார்பில் ஏற்கனவே, 200 கிராம் எடையுள்ள, 'பாதாம் மிக்ஸ் பவுடர்' விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
எனவே, நுகர்வோர் எளிதில் பயன்படுத்தும் வகையில், 14 கிராம் எடையுள்ள, 'பாதாம் மிக்ஸ் பவுடர்' சிறிய பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு, 10 ரூபாய்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பாக்கெட்டுகள், தமிழகம் முழுதும் செப்., 1 முதல், அனைத்து ஆவின் பாலகங்களிலும் விற்கப்படும்.
ஆவினின், 200 கிராம், பாதாம் மிக்ஸ், 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதை மிக குறைந்த விலையில் கிடைக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில், பாக்கெட் விலை உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்தால், 10 ரூபாய்க்கு, 14 கிராம் தான் கொடுக்க முடியும்.
இந்த சிறிய பாக்கெட் பாதாம் மிக்ஸை, ஒரு டம்ளர் பாலில் கலந்து, அதன் ருசி மாறாமல் குடிக்கலாம்.
இவ்வாறு ஆவின் அதிகாரிகள் கூறினர்.