ADDED : ஜன 31, 2026 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக பணிபுரிந்த, டி.ஜி.பி., அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அபய்குமார் சிங். தமிழக காவல் துறையில், 1993ம் ஆண்டு, ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருநெல்வேலி கமிஷனர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., மற்றும் சி.பி.சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., என, பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக பணியாற்றி வந்தார்.
இம்மாதம் அவர் ஓய்வு பெறுவதால், நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில், பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. மாநில சட்டம் -- ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உள்ளிட்ட அதிகாரிகள், அபய்குமார் சிங் பணிகள் குறித்து பாராட்டி பேசினர்.

