ADDED : செப் 25, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த எல்.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, ஐந்து பேரும் நிரந்தர நீதிபதிகளாக நேற்று காலை பதவி ஏற்றனர். அவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

