ADDED : மே 19, 2024 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஈக்காட்டு தாங்கல் மெட்ரோ ரயி்ல் நிலையம் அருகே ஆசிட் வீசி தாக்கிய சம்பவம் நடைபெற்றது.இதில் குழந்தை உட்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சென்னை ஈக்காட்டுதாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் மக்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் குழந்தை உட்பட 5 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

