சூரியனார்கோவில் ஆதினம் சாவியை கையகப்படுத்தியது சட்டமீறல்
சூரியனார்கோவில் ஆதினம் சாவியை கையகப்படுத்தியது சட்டமீறல்
UPDATED : நவ 14, 2024 11:44 AM
ADDED : நவ 14, 2024 06:12 AM

திருச்சி: சூரியனார்கோவில் ஆதினத்தின் சாவி மற்றும்சொத்துக்களை அறநிலையத் துறை கையகப்படுத்தியது சட்டமீறல் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே, சூரியனார் கோவில் ஆதினம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர், ஆதினமாக நீடிப்பது சரியா, தவறா என்று பல்வேறு தரப்பிலும், பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும்தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சூழலை பயன்படுத்தி, மக்கள் என்ற போர்வையில் ஆதினத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து, நேரடியாககளத்தில் இறங்கி, சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளனர், என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மடத்தின் சாவியை மக்கள் எடுப்பது, பின்னர் மகாலிங்க சுவாமிகள் அந்த சாவியை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன.
சூரியனார் கோவில் ஆதின விஷயத்தில் ஹிந்து அறநிலையத்துறை தலையிடுவதை, விஷ்வ ஹிந்து பரிசத் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், ஆதினம், மடம் யார் நிர்வாகம் செய்ய வேண்டும், என்ற அதிகாரம் படைத்தவர்கள் பாரம்பரிய ஆதினங்கள் தான்; அரசு அல்ல.
எனவே, அரசு அதிகாரிகள் சாவியை மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியது சட்ட மீறல் தான். இது போன்ற செயல்களை, தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சூரியனார் கோவில் ஆதினம் மடத்தை யார் நிர்வகிக்க வேண்டும்? என்று திருவாவடுதுறை ஆதினம், தருமபுர ஆதினம்,மதுரை ஆதினம் போன்ற பாரம்பரிய குரு மகா சன்னிதானங்களே தீர்மானிக்க அதிகாரம் படைத்தவர்கள்.
குரு மகா சன்னிதானங்கள்ஆலோசனைப்படி, தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் செயல்பட வேண்டும்,என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவுறுத்துகிறது, என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணை செயலாளர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.